முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லையில் ஆக.31இல்தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய பொதுக்குழு கூட்டம்
By DIN | Published On : 30th July 2019 10:04 AM | Last Updated : 30th July 2019 10:04 AM | அ+அ அ- |

தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்துக்கு, ஆட்சியர் தலைமை வகிப்பார். அப்போது, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் 2019-2022 ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெறும். இரு துணைத் தலைவர்கள், இரு இணைச் செயலர்கள், பொருளாளர் என ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 5 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் என மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்படுவர். தேர்தலில் பங்கு பெற விரும்புவோர் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் அடிப்படை உறுப்பினராகவும், உறுப்பினர் கட்டணத்தை நிலுவை இல்லாமல் செலுத்தியவராகவும் இருக்க வேண்டும். பொறுப்பாளர்கள் தேர்தலுக்கு ஆகஸ்ட் 5 - 8 வரையில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர் படிவம், உறுப்பினர் பட்டியல் ஆகியவற்றை உரிய கட்டணம் செலுத்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத் தேர்தல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருநெல்வேலி-627 009 என்ற முகவரியில் பெறலாம்.
ஆட்சிக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 100; செயற்குழு உறுப்பினருக்கு ரூ. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆக. 9க்குள் வர வேண்டும். ஆக. 14வரை திரும்பப் பெறலாம். இறுதிப்பட்டியல் ஆக.19இல் அறிவிக்கப்படும். ஆக. 31இல் தேர்தல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.