முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லையில் ஆணழகன் போட்டி
By DIN | Published On : 30th July 2019 10:02 AM | Last Updated : 30th July 2019 10:02 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
வள்ளியூர் ரோட்டரி சங்கம், மாஸ் ஜிம் நெல்லை மாவட்ட ஆணழகன் அசோசியேஷன் ஆகியவை இணைந்து "மிஸ்டர் திருநெல்வேலி' என்ற பெயரில் திருநெல்வேலி மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியை திருநெல்வேலியில் நடத்தின. இதில், பேட்டை ஆம்ஸ்ட்ராங் உடற்பயிற்சி கழக வீரர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
சந்தோஷ் 80 கிலோ எடை பிரிவில் 2 ஆவது இடத்தையும், ஷேக் முஹம்மது அலி 70 கிலோ எடை பிரிவில் 3 ஆவது இடத்தையும், ஆறுமுக ராஜ் 55 கிலோ எடை பிரிவில் 4 ஆவது இடத்தையும், கார்த்திக் 70 கிலோ எடைப் பிரிவில் 5 ஆவது இடத்தையும் பெற்றனர்.
இவர்களை தமிழ்நாடு வலுதூக்கும் சங்கப் பொருளாளர் வி.சிவராமலிங்கம், இணைச் செயலர் ஐ.உதயகுமார், திருநெல்வேலி மாவட்ட வலுதூக்கும் சங்க இணைச்செயலர் வினோத், ஆம்ஸ்ட்ராங் உடற்பயிற்சி கழக உரிமையாளர் ஹீரா அப்துல் ரசாக் ஆகியோர் வாழ்த்தினர்.