முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாவூர்சத்திரம் பகுதியில் கேந்தி விலை வீழ்ச்சி
By DIN | Published On : 30th July 2019 07:34 AM | Last Updated : 30th July 2019 07:34 AM | அ+அ அ- |

பாவூர்சத்திரம் பகுதியில் கேந்தி பூ விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான கீழப்பாவூர், நாகல்குளம், மேலப்பாவூர் பகுதி விவசாயிகள் தற்போது கேந்தி பூ சாகுபடி செய்துள்ளனர். நிகழாண்டு பருவ மழை பொய்த்த காரணத்தால் இப்பகுதியில் குளங்கள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடக்கின்றன. கிணற்றுப் பாசனம் உதவியுடன் கேந்தி சாகுபடி செய்த விவசாயிகள், விலை வீழ்ச்சி காரணமாக கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து கீழப்பாவூரை சேர்ந்த விவசாயி மணி கூறியது: நிகழாண்டு பருவ மழை பெய்யாத காரணத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது, பராமரிப்பு செலவு குறைவு என்ற காரணத்தால் கேந்தி சாகுபடி செய்தோம். கிணற்று தண்ணீர் மூலம் பூக்கள் விளைச்சல் ஓரளவு கிடைத்த போதும் கடந்த இரு நாள்களாக கேந்தி பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்ற கேந்தி, இரு நாள்களாக ரூ.10 முதல் ரூ.15 வரை மட்மே விற்கப்படுகிறது. பணம் கொடுத்து கிணற்று தண்ணீர் வாங்கி பயிரிட்ட எங்களுக்கு இந்த விலை வீழ்ச்சி கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றார்.