முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
புளியரை எஸ்.வளைவில் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?
By DIN | Published On : 30th July 2019 07:31 AM | Last Updated : 30th July 2019 07:31 AM | அ+அ அ- |

புளியரையில் அருகே எஸ்.வளைவு பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய கம்பங்களை நட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக - கேரள எல்லையான புளியரை எஸ்.வளைவு பகுதி ரயில் பாலம் வலதுபுறம் அமைந்துள்ள மின் கம்பங்கள் கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் போது சாயும் நிலையில் இருந்தன. இதையடுத்து, அவை கீழே விழாமல் இருக்க மற்றொரு மின் கம்பம் மூலம் முட்டு கொடுக்கப்பட்டது.
தற்போது இந்த மின் கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.இதனால், எந்நேரமும் மின்கம்பங்கள் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளன. எனவே, மின்வாரிய அதிகாரிகள் இந்த மின்கம்பங்களை அகற்றி மாற்று மின்கம்பங்கள் நட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.