முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மாவட்ட அளவிலான செஸ் போட்டி
By DIN | Published On : 30th July 2019 07:35 AM | Last Updated : 30th July 2019 07:35 AM | அ+அ அ- |

பாவூர்சத்திரத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
கிராமப்புற மாணவர்களுக்கு செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மும்பை இந்திய பேனா நண்பர் பேரவையின் இணை அமைப்பான ஐ.பி.எல். சதுரங்க கழகம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். பொதுப்பிரிவு, புதிய வீரர்கள் என இருபிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. பொதுப்பிரிவில் ஏஞ்சலோ பள்ளி மாணவர் மணிகண்டபிரபு முதலிடமும், புதிய வீரர்களுக்கான பிரிவில் பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் சுதன் முதலிடமும் பெற்றனர்.
9 வயது பிரிவில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் மகிலேஷ் சூர்யவேல், 10 வயது பிரிவில் ஹில்டன் பள்ளி மாணவர் யுவராஜா, 11 வயது பிரிவில் பாரத் பள்ளி மாணவர் முத்து சுஜித், 12 வயது பிரிவில் பாரத் பள்ளி மாணவர் நிதிஷ் 13 வயது பிரிவில் நகராட்சி பள்ளி மாணவி பெர்ஷிகா, 14 வயது பிரிவில் பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் அபிசேக் ஆகியோர் முதலிடம் பெற்றனர். அவர்களுக்கு ரொக்கப்பரிசு, வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில், பாவூர்சத்திரம் அரிமா சங்க நிர்வாகிகள் திருமலைகொழுந்து, இளங்கோ, இந்திய பேனா நண்பர் பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜான்டேனியல் செல்வராஜ், விஷி செஸ் அகாதெமி தலைவர் இசக்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஐ.பி.எல்.செஸ் அகாதெமி இயக்குநர் கண்ணன் நன்றி கூறினார்.