Enable Javscript for better performance
பாளை.யில் இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    பாளை.யில் இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 01st June 2019 10:20 AM  |   அ+அ அ-   |    |  

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாளையங்கோட்டையில் இ-சேவை மைய ஊழியர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ்,  தமிழக அரசு பொதுமக்களுக்கு தேவையான ஜாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்பு, வருமான சான்றிதழ், ஆதார் அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இ-சேவை மையங்கள் மூலம் வழங்கி வருகின்றன. 
    இந்த இ-சேவை மையங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனம் நுழைவுத் தேர்வு மூலம் பணியமர்த்தியுள்ளது.  இந்நிலையில் இ-சேவை மையங்களை தமிழக அரசு தனியாருக்கு தாரை வார்க்க முயன்று வருகிறது.  கேபிள் டிவி நிர்வாகம், ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து இஎஸ்ஐ, இபிஎஃப் பிடித்தம் செய்து வருகிறது. 
    ஆனால் அந்த பணபலன்களை திரும்பப் பெற முடியாத நிலை உள்ளது. கேரளத்தில் இதே பணியைச் செய்யும் ஊழியர்களுக்கு ரூ.24 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் ரூ.7675 மட்டுமே வழங்கப்படுகிறது.  எனவே இ-சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்.  சட்ட விரோதமாக பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இ-சேவை மைய ஊழியர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு இ-சேவை மைய ஒருங்கிணைப்பாளர் பாலவிநாயகம் தலைமை வகித்தார். தாயம்மாள் ராஜி, மகேஸ்வரி, பத்மாதேவி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மானுவேல்சாமி வரவேற்றார். சிஐடியூ மாவட்டச் செயலர் மோகன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.  மாவட்டத் தலைவர் வேல்முருகன், இணைச் செயலர் சுடலைராஜ், மாவட்டப் பொருளாளர் வண்ணமுத்து உள்ளிட்ட பலர் பேசினர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp