நெல்லை-அருகன்குளம் சாலை சீரமைக்கப்படுமா?
By DIN | Published On : 09th June 2019 03:38 AM | Last Updated : 09th June 2019 03:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம் கிராமத்துக்குச் செல்லும் பிரதான சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
திருநெல்வேலி அருகேயுள்ள சேந்திமங்கலம், அருகன்குளம் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கல்வி, மருத்துவம் உள்பட அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் 5 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலி சந்திப்பு பகுதிக்குத்தான் இப் பகுதி மக்கள் வந்து செல்கிறார்கள். திருநெல்வேலி-அருகன்குளம் சாலையை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால், இந்தச் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலையாக உள்ளது.
தாமிரவருணி மஹாபுஷ்கரத்தின்போது குறிப்பிட்ட பகுதி வரை சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அதன்பின்பு சுமார் 3 கி.மீ. சாலை மோசமாக உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருவோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகிறார்கள்.
எனவே, இந்தச் சாலையைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.