சுடச்சுட

  

  பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்க வளாகத்தில் கம்பன் இலக்கியச் சங்கத்தின் 1,188 ஆவது தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.
  பேராசிரியர் பா. வளன்அரசு தலைமை வகித்தார். மகாலிங்கம் இறைவாழ்த்து பாடினார். கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு பாடலுக்கு வரலாற்று ஆய்வாளர் செ. திவான் விளக்கமளித்தார். தமிழ் இலக்கியங்களில் புலம்பல் என்ற தலைப்பில் மருத்துவர் மகாலிங்க ஐயப்பன், தற்கால கவிஞர்கள் சொல்லிய புலம்பல் என்ற தலைப்பில் பா. வளன்அரசு, மண்டோதரியின் புலம்பல் என்ற தலைப்பில் பொருளாளர் மு.அ. நசீர் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
  ஆசிரியர் கோதைமாறன், ராமகிருஷ்ணன், முத்துப்பாண்டி, வை. சுப்பிரமணியன், வெங்கடாசலபதி, திருமலைக்குமார், வழக்குரைஞர் மாரியப்பன், கிருபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பி. சுந்தரம் வரவேற்றார். செயலர் மு. கனகராசு நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai