சுடச்சுட

  

  குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு  விழிப்புணர்வு பிரசாரம்

  By DIN  |   Published on : 13th June 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு வேன் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது.
  தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவை சார்பில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
  தொடர்ந்து, விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட முன்மை நீதிபதி ஏ. நசீர்அகமது தொடக்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், குழந்தைகளை கல்விக்கூடங்களுக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றம். இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த வேன் பிரசாரம் நடத்தப்பட்டு, துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்படவுள்ளது என்றார்.
  நிகழ்ச்சியில், நீதிபதிகள் அருள்முருகன், கிளாட்சன் பிளசட் தாகூர், சந்திரா, சார்பு நீதிபதிகள் குமரேசன், பத்மா, உரிமையியல் நீதிபதிகள் கெங்கராஜ், சுப்பையா, நீதித்துறை நடுவர்கள் பாபு, கடற்கரைசெல்வம், பழனி, நிஷாந்தி, மகேஸ்வரன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சிவசூரியநாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும் நீதிபதியுமான குமரேசன் செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai