சுடச்சுட

  

  நெல்லையில் பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு ஒருநாள் நீட்டிப்பு

  By DIN  |   Published on : 13th June 2019 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல்லையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வியாழக்கிழமை (ஜூன் 13) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 2 முதல் மே 31ஆம் தேதி வரை ஆன்-லைன் முறையில் நடைபெற்றது.  பின்னர், சமவாய்ப்பு எண்( ரேண்டம்), சான்றிதழ் சரிபார்க்கும் நாள், நேரம் ஆகியவை கடந்த 3ஆம் தேதி விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தியாக செல்லிடப்பேசிக்கு அனுப்பப்பட்டது.
  திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்து 800 பேருக்கும், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 1,141 பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
  அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இப்பணிகள் 12ஆம் தேதியுடன் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் பொறியியலைக் காட்டிலும் கலை-அறிவியல் படிப்புகளுக்கு நிகழாண்டில் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால், சுமார் 20 சதவீதம் பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லையெனக் கூறப்படுகிறது.  எனவே, வியாழக்கிழமை (ஜூன் 13) ஒருநாள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, பொறியியல் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai