சுடச்சுட

  

  வேய்ந்தான்குளம்-டக்கரம்மாள்புரம் சாலை விரிவாக்கம்: முறையாக செயல்படுத்த எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th June 2019 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேய்ந்தான்குளம்-டக்கரம்மாள்புரம் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை முறையாக மேற்கொள்ள ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து டக்கரம்மாள்புரம் வரை திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக முதல்வரின் சிறப்பு நிதியில் இருந்து சுமார் ரூ. 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. 
  சாலை விரிவாக்கப் பணிகளின்போது முதலில் இந்தச் சாலையில் இருக்கும் 6 சிறுபாலங்கள் கட்ட வேண்டும். அதேபோல மாற்றுப்பாதை அமைக்க வேண்டும். மாற்றுப்பாதை அமைக்க இயலாத இடங்களில் ஒரு பகுதியில் மட்டும் முதலில் பணியை முடித்துவிட்டு மறுபகுதியில் பணியை தொடங்க வேண்டும் என்ற அடிப்படை விதிகளை கூட கடைப்பிடிக்காமல் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இச்சாலையில் பணிகள் நடைபெறுகிறது. இதனால் புழுதி பரவி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. 
  சாலை விரிவாக்கப்பணியில் நிரப்பப்படும் வெட்மிக்ஸ் (உலர் ஜல்லி கலவை) ஈரப்பதத்துடன் மட்டுமே நிரப்ப வேண்டும். பின்னர், தினமும் தண்ணீர் தெளித்து ரோலர் மூலம் செம்மைப்படுத்த வேண்டும். இதுபோன்ற நடைமுறையை முறையாக பின்பற்றாமல் மேற்கொள்வது நெடுஞ்சாலைத்துறை மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கை காட்டுகிறது. 
  எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த சாலை விரிவாக்கப்பணிகளை உடனடியாக ஆய்வு செய்து தவறுக்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சாலைப்பணியை முறையாக விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மேலப்பாளையம்-நத்தம் இடையே பாளையங்கால்வாயின் குறுக்கே உள்ள பாலப்பணிகளை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். பாளையங்கோட்டை சமாதானபுரம் முதல் பெல் மருத்துவமனை வரை குடிநீர் வடிகால்வாரியம் மூலம் குழாய் பதிக்கப்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai