புளியங்குடியில் முஸ்லிம் லீக் தெருமுனைப் பிரசாரம்
By DIN | Published on : 14th June 2019 07:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தெருமுனை பிரசாரம் காயிதே மில்லத் திடலில் நடைபெற்றது.
இப்பிரசாரத்துக்கு கட்சியின் நகரத் தலைவர் அப்துல் வகாப் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் தி. கலீல் ரஹ்மான், முன்னாள் நகரத் தலைவர் அ.மைதீன் பிச்சை, நகரத் துணைத்தலைவர் கொ.இ.அப்துல் வகாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் துணைச் செயலர் அப்துல் வகாப்,நகரத் துணைத்தலைவர் அப்துல் ரஹிம் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் மாவட்டச் செயலர் ஜாகீர் அப்பாஸ்,செய்யது அலி பாதுஷா,முகம்மது இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். செயலர் ஹபிபுல்லா வரவேற்றார். பொருளாளர் முகம்மது சுலைமான் நன்றியுரை வழங்கினார்.