மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் கனி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட பொதுச் செயலர் கோட்டூர் பீர்மஸ்தான், மாவட்டச் செயலர்கள் பர்கிட் அலாவுதீன், பேட்டை முஸ்தபா, மாவட்டப் பொருளாளர் மீராஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ஹயாத் முகம்மது வரவேற்றார்.
கட்சியின் மாநிலச் செயலர் அகமது நவவி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசியது: வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நாசக்கார திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் இருந்து கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். தமிழகத்தை சூழ்ந்துள்ள பேரழிவு திட்டங்களை எதிர்த்து தன்னலமற்று, மக்கள் நலனுக்காக போராடும் இயக்கங்கள், கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
கூடங்குளத்தில் அணுக்கழிவு பாதுகாப்பு மையம் அமைக்கக்கூடாது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது. எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ஹைதர் இமாம், பாப்புலர் ப்ரண்ட் மாவட்டத் தலைவர் முகம்மது அலி, மருத்துவ சேவை அணி ஜெய்லானி, நிர்வாகிகள் மின்னதுல்லாஹ், சலிம்தீன், புஹாரி, காசிம், சுலைமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மீராஷா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com