வீரவநல்லூரில் பைக் திருட்டு
By DIN | Published On : 22nd June 2019 06:41 AM | Last Updated : 22nd June 2019 06:41 AM | அ+அ அ- |

வீரவநல்லூரில் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வீரவநல்லூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்லானி (25). தொலைக்காட்சி பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர், தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தாராம். வியாழக்கிழமை பிற்பகலில் இந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. புகாரின்பேரில், வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.