கடையத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்க சமக கோரிக்கை
By DIN | Published On : 23rd June 2019 12:54 AM | Last Updated : 23rd June 2019 12:54 AM | அ+அ அ- |

கடையத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கடையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் செங்குளம் கணேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச்செயலர் முருகன், ஒன்றியச் செயலர்கள், பெரியசாமி, ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அவைத் தலைவர் செய்யது மசூது, மாவட்ட மகளிர் அணி நிர்வாகி அந்தோணியம்மாள், ஆலங்குளம் ஒன்றியச் செயலர் ஜெயசக்திபாண்டியன், நிர்வாகிகள் ஏசுராஜன், செல்வக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெபகர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: பெருந்தலைவர் காமராஜர், கட்சியின் தலைவர் சரத்குமார் ஆகியோர் பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுவது; ஜம்புநதி கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்; கடையம் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் கலைக்கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ம் தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.