சுரண்டையில் இன்று இலவசகண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 23rd June 2019 12:57 AM | Last Updated : 23rd June 2019 12:57 AM | அ+அ அ- |

மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை சுரண்டையில் நடத்துகின்றன.
சுரண்டை ஜெயேந்திரா மழலையர் பள்ளியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், குழந்தைகளின் கண் நோய், கண் நீர் அழுத்த நோய், சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு, கண்புரை நோயாளிகளுக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் அமைப்பாளர்கள் மற்றும் கடையாலுருட்டி நாதன் டிம்பர் நிறுவனத்தினர் செய்துள்ளனர்.