மதவக்குறிச்சி பள்ளியில் யோகா தினம்
By DIN | Published On : 24th June 2019 10:13 AM | Last Updated : 24th June 2019 10:13 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: மானூர் அருகேயுள்ள மதவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது.
மானூர் வட்டாரக் கல்வி அலுவலர் வே.கீதா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சொ.உமையொருபாகம் வரவேற்றார். "யோகாவின் நன்மைகள்' என்ற தலைப்பில் மனவளக்கலை பேராசிரியர் ஏ.லீலாவதியும், "மனவளக்கலையின் யோகா பயிற்சிகள்' என்ற தலைப்பில் கோவிந்தராஜனும் சொற்பொழிவாற்றினர். மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற சார்ஆட்சியர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் ஆல்பர்ட் நன்றி கூறினார்.