987மாணவர்களுக்கு மடிக்கணினி அளிப்பு
By DIN | Published On : 25th June 2019 05:33 AM | Last Updated : 25th June 2019 05:33 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் அ.வே.றாம.வே. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பிளஸ் 2 பயின்று வரும் மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணியை அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.முருகையாபாண்டியன் வழங்கினார். அம்பாசமுத்திரம் பள்ளியில் 273, கல்லிடைக்குறிச்சி பள்ளியில் 353, வெள்ளங்குளியில் 361 என 987 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், மேரி மார்க்ரெட், இவாஞ்சலின் பால்ராஜ், மகேஷ், உதவி தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீராம், முருகன், நகரச் செயலர்கள் அறிவழகன், ராமையா, சங்கரநாராயணன், ராமையா, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச் செயலர் முத்தையா, விஜயபாலாஜி, ப்ராங்க்ளின், வெள்ளங்குளி அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முத்துராமன், முன்னாள் தலைவர் ஜனார்த்தனம், வெள்ளங்குளி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமலைக்குமார், ஆசிரியர் ஜூலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.