குற்றாலத்தில் ஜூலை 2இல் ஏஐடியூசி பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 25th June 2019 05:38 AM | Last Updated : 25th June 2019 05:38 AM | அ+அ அ- |

அரசு விரைவு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்க (ஏஐடியூசி) 14 ஆவது ஆண்டுப் பேரவை கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி குற்றாலத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் ஜே.லட்சுமணன் தலைமை வகிக்கிறார். பொதுச்செயலர் எம்.சக்கரபாண்டி ஆண்டறிக்கை சமர்ப்பிக்கிறார். இதில், சங்கப் பொருளாளர் கே.சங்கர், ஏஐடியூசி மாநிலச் செயலர் ஆர்.ஆறுமுகம், சம்மேளன துணைப் பொதுச் செயலர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலர் பி.சுடலைமுத்து, சம்மேளன துணைத் தலைவர் எல்.குருசாமி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.