சுடச்சுட

  

  திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யக் கோரி மாநகராட்சி  அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
  திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையர் பெ.விஜயலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். இக் கூட்டத்தில் பெருமாள்புரம் நேதாஜி தெரு மக்கள் நலவாழ்வுச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு: 
  மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பெருமாள்புரம் நேதாஜி தெரு விரிவாக்கப் பகுதியில்  தெருவிளக்கு வசதி ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  புதிய கட்டடம் தேவை: திருநெல்வேலி நகரம் பாபா தெருவைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சியின் 43 ஆவது வார்டுக்குள்பட்ட பாபா தெருவில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிறது. இப்போது அக் கட்டடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. 
  இப்போது சமுதாய நலக் கூடத்தை சீரமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஆனால், கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டிக் கொடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  வாருகால் வசதி: குலவணிகர்புரத்தில் வாருகால் மற்றும் மழைநீர் வடிகால் வசதி செய்யக் கோரியும், பழையபேட்டை அருகேயுள்ள சர்தார்புரத்தில் பாதாள சாக்கடை வசதி அமைக்கக் கோரியும் பொதுமக்கள் மனு கொடுத்தனர். பாளையங்கோட்டை சாந்திநகர் போலீஸ் காலனி மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் பூங்கா அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai