சுடச்சுட

    

    ஆலங்குளம் அருகே கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
    ஆலங்குளம் சீதபற்பநல்லூர் அருகே காங்கேயன்குளம் கிராமம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் பிரபு (38). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி, ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  
    பிளம்பராக வேலை பார்த்து வந்த இவர், செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி-தென்காசி சாலை வெள்ளாளன்குளம் விலக்குப் பகுதியில் சாலையோரம் தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டிருந்ததை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.  அப்போது தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் பிரபு மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சீதபற்பநல்லூர் போலீஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் தென்காசி அருகேயுள்ள மத்தளம்பாறை மாடசாமி மகன் சிவபாலகிருஷ்ணனிடம் (25) விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai