சுடச்சுட

    

    திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தோப்பு கிராம மக்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
    திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு நம்பித்தோப்பு மக்கள் 40-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அளித்த மனு: 
    எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களை திருக்குறுங்குடி போலீஸார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். 
    இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது விசாரணை நடத்தி பொதுமக்கள் இயல்பாக வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai