சுடச்சுட

  

  நெல்லை சுந்தரனார் பல்கலை.யில் உடற்கல்வி இயக்குநர்கள் கூட்டம்

  By DIN  |   Published on : 26th June 2019 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான உடற்கல்வி இயக்குநர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது.
  துணைவேந்தர் கா.பிச்சுமணி தலைமை வகித்தார். விளையாட்டு மைய இயக்குநர் செ.துரை வரவேற்றார். கூட்டத்தில் நிகழாண்டுக்கான விளையாட்டுத் துறை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. 
  இதில், மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் டேனியல் பேரின்பராஜ் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியின் கன்வீனராகவும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சிவஞானம் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும்,  நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கிறிஸ்டி செலின் மேரி பெண்கள் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  கடந்த கல்வி ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் பிரிவில் துத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி முதலிடத்தையும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மூன்றாம் இடத்தையும், நாகர்கோவில் எஸ்.டி.இந்துக் கல்லூரி நான்காம் இடத்தையும் பிடித்தன.   பெண்கள் பிரிவில், தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி முதலிடத்தையும், நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி இரண்டாம் இடத்தையும், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி மூன்றாம் இடத்தையும், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி நான்காவது இடத்தையும் பிடித்தன.
  போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு துணைவேந்தர் கா.பிச்சுமணி கோப்பை வழங்கி பாராட்டினர். கூட்டத்தில், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள், விளையாட்டுத்துறைப் பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.  தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கிறிஸ்டி ஆனந்தி ஹேமலதா நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai