சுடச்சுட

  

  பாளை. அஞ்சல் அலுவலகத்தில் 29இல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

  By DIN  |   Published on : 26th June 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் ஜூன் 29ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
  இதுதொடர்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இரா.சாந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. திருநெல்வேலி கோட்டத்திற்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் அஞ்சல் பணிகளில் உள்ள குறைகள், அஞ்சல் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் d‌o‌t‌i‌r‌u‌n‌e‌l‌v‌e‌l‌i.‌t‌n@‌i‌n‌d‌i​a‌p‌o‌s‌t.‌g‌o‌v.‌i‌n    என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறைகள் மற்றும் ஆலோசனைகளை 28-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai