சுடச்சுட

  

  களக்காடு அருகே பி.எஸ்.என். எல். கோபுரத்தில் உள்ள பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
  களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு பகுதியில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை முதல் பி.எஸ்.என்.எல். சேவை கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வள்ளியூர் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் களக்காடு செ. விஸ்வநாதன், கடம்போடுவாழ்வு பி.எஸ்.என்.எல். கோபுரத்தை பார்வையிட்டபோது,  அங்குள்ள கோபுரத்தில் 24 பேட்டரிகள் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1.20 லட்சமாகும். இதுகுறித்து வள்ளியூர் பி.எஸ்.என்.எல். இளநிலை தொலைத் தொடர்பு அலுவலர் ராமகிருஷ்ணன் களக்காடு போலீஸில் புகார் தெரிவித்தார்.  அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai