சுடச்சுட

  

  ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சட்டையில் பொருத்தும் நவீன கேமரா

  By DIN  |   Published on : 26th June 2019 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பணியாற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சட்டையில் பொருத்தும் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
  ரயில் நிலையத்தில் பயணிகளுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதங்கள் குறித்த புகார்கள் அடிக்கடி வந்தவண்ணம் இருந்தன.  இந்நிலையில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு சட்டையில் பொருத்தும் அதிநவீன கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸார், தற்போது இந்த கேமராவை சட்டை பையில் அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கேமராவில் பெறப்படும் தகவல்கள் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதாக ரயில்வே பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai