சுடச்சுட

  

  வாசுதேவநல்லூர் சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு

  By DIN  |   Published on : 26th June 2019 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவுக்கான நவீன வசதிகளுடன்கூடிய  புதிய கட்டடத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
  வாசுதேவநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் நளினி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் கே. சாந்தி சரவணபாய் முன்னிலை வகித்தார். டாக்டர் ராஜ்குமார் வரவேற்றார். அ. மனோகரன் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர்கள் ரவிக்குமார், சின்னப்பன், ராஜாராம், இளங்கோ, செல்வம், மருத்துவம்சாரா மேற்பார்வையாளர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai