டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: நெல்லையில் 8,527 பேர் எழுதினர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தேர்வை 8 ஆயிரத்து 527 பேர்  எழுதினர்.
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆயிரத்து 901 பேருக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், 8 ஆயிரத்து 527 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 3, 374 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தேர்வை, ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இம் மாவட்டத்தில் மொத்தம் 36 மையங்களில் தேர்வு நடைபெற்றது.  தேர்வைக் கண்காணிக்க வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் 9 சுற்றுக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. குடிநீர், தடையற்ற மின்சார வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தவறுகள் நிகழாமல் தடுக்க கண்காணிப்பு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com