சுடச்சுட

  

  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்புகள் சார்பில் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
  இந்த கருத்தரங்கிற்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் சி.கருப்பையா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்றார். "இன்றைய நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் நாட்டின் நிலைமையும் ஓய்வூதியர்கள் இயங்க வேண்டிய கடமையும்' என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.  கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ராஜமணி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் எஸ்.ஆறுமுகம், சுகுமாரன், கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் எஸ்.வைகுண்டமணி, பொருளாளர் நெடுஞ்செழியன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் ராமமூர்த்தி, மூன்று மாவட்ட மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஓய்வுபெற்றோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
  இதனிடையே, தேர்தல் நடத்தை விதிகளை காரணம்காட்டி,  தொடர்ந்து கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததால்  பாதியிலே கூட்டம் முடிவுற்றது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai