சுடச்சுட

  

  ஆலங்குளம்  அருகே இளைஞர் கொலை வழக்கில் பெண் உள்பட இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
  ஆலங்குளம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த சரவணன் மகன் கெங்கைபாண்டி (23). இவர், சில தினங்களுக்கு முன் வெள்ளாளன்குளம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சீதபற்பநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து கொலையாளிகள் தேடி வந்தனர்.
  திருநெல்வேலி அருகே சுத்தமல்லி கொண்டாநகரம் தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரது  மனைவிக்கும் கெங்கைபாண்டிக்கும் இடையே பழக்கம் இருந்ததாகவும், எச்சரித்தும் கேட்காததால் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் நெட்டூர் காந்திமதி தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து என்ற குமார் (30), கணேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய சக்தி, கணேசன் மனைவி முப்புடாதி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.   சக்தி பாளையங்கோட்டை சிறையிலும், முப்புடாதி மதுரை பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai