சுடச்சுட

  

  ஓய்வூதிய உயர்வை அமல்படுத்த ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 16th March 2019 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் நல சங்கத்தின் மாநில அமைப்பாளர் தெ. ஆறுமுகம் தெரிவித்துள்ளார். 
  இது தொடர்பாக அவர் வெளியிட்ட  அறிக்கை: 
  மத்திய அரசு பட்ஜெட்டில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 50 சதம் ஊதிய உயர்வு அறிவித்துள்ளது.  எனவே இதை மாநில அரசு அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாகவும்,  ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய உயர்வாகவும் வழங்க வேண்டும்.  ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ரூ.7 ஆயிரத்து 850 உடன் அகவிலைப்படி இணைத்து குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மருத்துவ படியாக ரூ. 500 வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai