சுடச்சுட

  

  கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பான தெற்கு மண்டல குழுவின் விசாரணை,  திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அண்மையில் நடைபெற்றது.
  இதுகுறித்து திருநெல்வேலி மண்டல மேலாண்மை இயக்குநர் செல்வகணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பான தெற்கு மண்டல குழுவின் விசாரணையை ஓய்வுபெற்ற நீதியரசர் ஆர்.எஸ் ராமநாதன் நடத்தினார்.  இதில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,  மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.நா.பிரியதரிசினி,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சி.குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  விசாரணையின்போது,  புளியங்குடி மேற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வழக்குக்கு  இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.  மற்ற சில வழக்குகளின் விசாரணை அடுத்த மாதம் 23, 24 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai