சுடச்சுட

  

  பாளை. சதக்கத்துல்லா கல்லூரியில் 23 இல் வேலைவாய்ப்பு முகாம்

  By DIN  |   Published on : 16th March 2019 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் வரும் 23ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
  இது குறித்து அக் கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் செய்தியாளர்களிடம் கூறியது: பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சி நிறுவனம், திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கம், பொங்கு வென்சர்ஸ் ஆகியவை இணைந்து வளாக நேர்காணல் நடத்தப்படவுள்ளது. இம்முகாம் வரும் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெறும் என்றார்.
  பொங்கு வென்சர்ஸ் இணை நிறுவனர் பா.பிரீத்தி பேசியது: எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., பி.இ., பி.டெக்., பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஐ.டி.ஐ., டிப்ளமோ பெற்றவர்கள் மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர் இம் முகாமில் பங்குபெறலாம். பதிவுக் கட்டணம் இல்லை. 
  முகாமில் கலந்துகொள்ள  ‌w‌w‌w.‌v‌e‌t​a‌n.‌i‌n எனும் இணையதளத்தில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம். பட்டதாரிகள் தங்கள் சுயவிவரக் குறிப்பின் 10 பிரதிகளோடு, 10 பாஸ்போர்ட் நிழற்படங்களையும் கொண்டுவர வேண்டும். நாற்பதுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தகுதியான பட்டதாரிகளைத் தேர்வு செய்யவிருக்கின்றன. அப்போது, வேலைவாய்ப்பு வழிகாட்டி பயிலரங்கும் நடைபெறவுள்ளது. பொங்கு வென்சர்ஸ் நிறுவனர் டாக்டர் வினோத், வேலை தருவோராக எவ்வாறு மாறுவது? எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார் என்றார். 
  அப்போது கல்லூரி வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளர் மு.இ. ஜாஹிர் ஹுசைன், நிதிக் காப்பாளர் ஏ. ஹாமில், தமிழ்த் துறைத் தலைவர் ச. மகாதேவன், புறநகர் ரோட்டரி சங்கத் தலைவர் வடிவேல், செயலர் ஜெய்லானி ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai