சுடச்சுட

    

    "மாநகராட்சி வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்'

    By DIN  |   Published on : 16th March 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாநகராட்சி வரி வசூல் மையங்கள் இம் மாதம் 31 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பி.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    2018-19 ஆம் நிதியாண்டு முடிவடைய சில நாள்களே உள்ள நிலையில் பொதுமக்கள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி,  குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, மாநகராட்சி கடை வாடகை,  பாதாள சாக்கடை திட்ட சேவைக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஏதுவாக இம் மாதம் 31 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து கணினி வரி வசூல் மையங்களும் இயங்கும்.  பொதுமக்கள் காலம் தாழ்த்தாமல் வரியினங்களை செலுத்த வேண்டுமென அந்தச் செய்திக் குறிப்பில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai