சுடச்சுட

  


  திருநெல்வேலி சந்திப்பில் உலக நுகர்வோர் தின விழா மற்றும் மனித உரிமை பாதுகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாநிலத் தலைவர் வி.தங்கையா தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர்கள் எம்.விக்டர் (திருநெல்வேலி) ,  எஸ். அக்பர் அலி (கன்னியாகுமரி), வி.விஸ்வரத்தினம் (திண்டுக்கல்),  எம்.ஜெயபிரகாஷ் (தூத்துக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பங்கேற்று சிறந்த நுகர்வோர் ஆர்வலர்களுக்கு  பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். தலைமை நிலையச் செயலர் ஏ.வேலுசாமி வரவேற்றார். 
  துணைத் தலைவர் எஸ்.ஐயம் பெருமாள், அரசு சட்டக்கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் முகம்மது, பேரவை செயலர் கனகாம்பாள், மகளிர்அணி அமைப்பாளர் கயற்கண்ணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு நுகர்வோரின் சட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்தும் நுகர்வோருக்கான பாதுகாப்புகள் குறித்தும் பேசினர்.
  விழாவில், கல்வித்துறை, போக்குவரத்துத்துறை, ரயில்வேதுறை, காவல்துறை, தொழிலாளர் துறை, உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai