சுடச்சுட

  


  சங்கரன்கோவிலில் தாமரைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. 
  தாமரைக் கழக நிர்வாகத் தலைவர் மி.அரசமணி தலைமை வகித்தார். நிறுவனர் சொ.வீரபாகு, டி.எஸ்.பி.ராஜேந்திரன், வழக்குரைஞர் கார்த்திகா, சேவா டிரஸ்ட் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  முன்னாள் தலைவர் பால்ராஜ் திருக்குறள் விளக்கமளித்தார்.ஆர்.பாண்டிக்கண்ணு இன்று ஒரு தகவல் கூறினார்.
   அலையன்ஸ் கிளப் ஆளுநர் சுமதிரங்கன்,இண்டர்நேஷனல் இயக்குநர் ரெங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
  மகளிர் முன்னேற்றம், மகளிர் கல்வி,  வங்கித் துறை, பாதுகாப்பு, மருத்துவம், சமுதாய முன்னேற்றம் ஆகியவை குறித்து முறையே அரிமா சங்க முன்னாள் தலைவர் சாந்தி செல்வக்குமார்,   விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் கோமா செல்லம், இமாம் ஹசாலி மெட்ரிக் பள்ளி முதல்வர்  ராமலட்சுமி,  எஸ்.ராஜேஸ்வரி,  காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, அரசு மருத்துவர் அகிலாண்டபாரதி,  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் அலுவலர் பிரீவா ஆகியோர் பேசினர்.  சங்கச் செயலர் ஆறுமுகம் வரவேற்றார். சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai