சுடச்சுட

  


  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து,  சிவகிரியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சனிக்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்டச் செயலர் கு. பிச்சைமணி தலைமை வகித்தார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். காசிவிஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும்;  உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் வழக்கு விசாரணை நடைபெறவேண்டும்;  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் டி. இசக்கித்துரை,  ஒன்றியச் செயலர் எம். தங்கவேலு,  மாவட்டப் பொருளாளர் டி. சுப்பையா, நகரச் செயலர்கள் ப. குருசாமி (சிவகிரி),  சமுத்திரம் (ராயகிரி), மாவட்டக் குழு உறுப்பினர் பி. சிங்காரவேலு, நிர்வாகிகள் ஏ. கருப்பையா, வீ. ராஜேந்திரன், இ. ஸ்டாலின், பாலசுப்பிரமணியன், கணேசன், வேலுச்சாமி, கிருஷ்ணன், ச. குருசாமி, இன்னாசிமுத்து, ஏசையா, கோவிந்தன், மாடசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai