மக்களவைத் தேர்தல்: சட்டம்-ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தேர்தலையொட்டி சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.


மக்களவைத் தேர்தலையொட்டி சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தலில் பணியாற்ற உள்ள  காவல்துறை அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி விதிமுறைகள், பிரசார வாகன பயன்பாடு,  சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியது: இந்திய தேர்தல் ஆணையம் காவல் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து தேர்தல் பணிகளைத் துரிதமாக செய்ய அறிவுறுத்தியுள்ளது. 
நமயஐஈஏஅ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த வழிவகுத்துள்ளது.   
இந்தச் செயலி மூலம் தேர்தலில் அரசியல் கட்சிகள் நடத்தக்கூடிய பொதுக்கூட்டம், ஊர்வலம், உபயோகப்படுத்தும் வாகனங்கள், ஒலிப்பெருக்கிகள், வானூர்திகள் அனுமதிக்கு விண்ணப்பிக்கவும்,  ஒப்புதல் அளிக்கவும் முடியும்.
காவல் துறை அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்துவது குறித்தான பயிற்சி வழங்கப்பட்டது என்றார் அவர்.
இக் கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், காவல் கண்காணிப்பாளர் பெ.வே.அருண்சக்திகுமார், திருநெல்வேலி சார் ஆட்சியர் மரு.மணீஷ்நாரணவரே,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ்குமார்,  (தேர்தல்) சாந்தி, தென்காசி கோட்டாட்சியர் செüந்தரராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், தேர்தல் வட்டாட்சியர் புகாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com