வாசுதேவநல்லூர் அருகே என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வெள்ளானைக்கோட்டையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.


வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வெள்ளானைக்கோட்டையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
7 நாள்கள் நடைபெற்ற முகாமுக்கு எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத் தாளாளர் எஸ்.டி. முருகேசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் இரா. தமிழ்வீரன் வரவேற்றார். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ஜே. ராஜகோபாலன் வாழ்த்திப் பேசினார்.
டாக்டர் கே. சாந்தி சரவணபாய் தலைமையில் பொது மருத்துவ முகாமும், சங்கரா கண் மருத்துவமனை சார்பில், கண் விழித்திரை ஆய்வு ஆலோசகர் முத்துலட்சுமி தலைமையில் கண் சிகிச்சை ஆலோசனை முகாமும் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். அதேபோல, பேரிடர் மீட்புப் பயிற்சி மற்றும் கல்வி குறித்து செல்வமுருகேசனும், பாலியல் நோய்த் தடுப்புக் குறித்து விஜயகுமாரும் விளக்கம் அளித்தனர். 
முகாமில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு, டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் அளித்தல், மரக்கன்று நடுதல், துப்புரவுப் பணி, சாலை மேம்பாடு, பாலித்தீன் ஒழிப்பு, மின் சிக்கனம், கோயில், மசூதி மற்றும் பொது இடங்களில் தூய்மைப் பணி போன்றவை நடைபெற்றன.
குருபாக்கியம் ஆரம்பப் பள்ளிக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்துதரப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் ஆர். குருபிரசாத் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com