கல்லூரிகளில் வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் சார்பில்,  நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளர்

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் சார்பில்,  நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம்- பேரணி அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி மற்றும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சிகளில்  உதவி ஆட்சியர் (பயிற்சி) என்.ஓ. சுகபுத்ரா கலந்துகொண்டு முதல் முறை வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களிடையே வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துரை வழங்கினார். 
தொடர்ந்து மாணவர்கள், பேராசிரியர்களுக்கு ஒப்புகைச் சீட்டுடன் கூடிய புதிய வாக்களிக்கும் முறை குறித்து மண்டல துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்தார். மாணவர், மாணவிகள் அனைவரும் தவறாது தங்கள் வாக்கைச் செலுத்துவோம் என்று உறுதி மொழியெடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவர், மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டபடி சென்றதோடு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கினர். பாபநாசம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதல்வர் சு.சுந்தரம் தலைமை வகித்தார்.  நிர்வாக அதிகாரி ரா.நடராஜன், விக்கிரமசிங்கபுரம் அரசு நூலக  நூலகர் குமார்,  தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மைய இயக்குநர் சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில்,  வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், கிராம உதவியாளர் முத்துக்குமார், பேராசிரியர்கள் சிவசங்கர், ரவிசங்கர், வள்ளியம்மாள், ராஜசேகரன், சண்முகசுந்தரம், உடற்கல்வி இயக்குநர் பழனிக்குமார், ராஜேஷ், முத்துகிருட்டிணம்மாள், மாயாண்டி கண்ணன், காசிராஜன் மற்றும் மாணவர்  மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவி ஐஸ்வர்யா விண்ணரசி வரவேற்பு நடனமாடினார். தமிழ்த் துறை முதலாமாண்டு மாணவி இந்திராகாந்தி வரவேற்றார்.  இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி நிலோபர் நிஷா பயிற்சி ஆட்சியர் குறித்து அறிமுக உரையாற்றினார்.  வேதியியல் துறை மூன்றாமாண்டு மாணவி மகேஸ்வரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 
ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் பாலச்சந்திரன் தலைமையில் உதவி நூலகர் சண்முகானந்த பாரதி, சந்தான சங்கர், சபரி ஆகியோர் செய்திருந்தனர்.
தொடர்ந்து அம்பை கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுடலையாண்டி தலைமை வகித்தார்.  கல்லூரிச் செயலர் எஸ்.தங்கப்பாண்டியன், ம.தி.தா. இந்துக் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  பேராசிரியர் சங்கர் வரவேற்றார்.  நூலகர் விஜி நன்றி கூறினார். தொடர்ந்து மாணவர், மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கல்லூரியிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் சார்பில் தலைமை நூலகர் முத்துகிருஷ்ணன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com