பிளஸ்-2 தேர்வுகள் இன்று நிறைவு: மார்ச் 29 முதல் விடைத்தாள் திருத்தம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) நிறைவடைகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) நிறைவடைகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணி இம் மாதம் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2  பொதுத்தேர்வு கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 19) தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், வள்ளியூர் கல்வி மாவட்டங்களில் 137 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. 17 ஆயிரத்து 370 மாணவர்களும், 22 ஆயிரத்து 87 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 457 மாணவர்-மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினர். இவர்களில் 148 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். இவர்களுக்காக 86 ஆசிரியர்கள் சொல்வதை எழுதுபவராக நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு நிறைவுபெறும் நிலையில் விடைத்தாள்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.  
பிளஸ்-2 விடைத்தாள்களைத் திருத்தும் பணி இம் மாதம் 29 ஆம் தேதி தொடங்குகிறது. பாளையங்கோட்டை ராம்நகரில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தென்காசியில் உள்ள மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது. 
ஏப்ரல் 11 ஆம் தேதிக்குள் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ்-2 மட்டுமன்றி பிளஸ்-1 தேர்வில் தவறி இப்போது தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. 
இதேபோல பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் ஏப்ரல் 1 முதல் 13 ஆம் தேதிக்குள் திருத்தப்பட உள்ளன. பாளையங்கோட்டை மேட்டுத்திடல் சாலையில் உள்ள சின்மயா வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி, தென்காசியில் உள்ள ஐசிஐ மேல்நிலைப் பள்ளி மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com