பாளை.யில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு
By DIN | Published On : 24th March 2019 03:47 AM | Last Updated : 24th March 2019 03:47 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், நேரு இளையோர் மையம் ஆகியவை சார்பில் பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவேன்சன் காதுகேளாதோர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.கலைச்செல்வி வரவேற்றார்.
நேரு இளையோர் மைய துணை இயக்குநர் எம்.சடாச்சரவேல் தலைமை வகித்தார். திருநெல்வேலி உதவி ஆட்சியர் (பயிற்சி) என்.ஓ.சுகபுத்ரா தொடங்கி வைத்து பேசுகையில், இம் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நன்மைகள் குறித்து விளக்க வேண்டும் என்றார்.
பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே.ராஜேந்திரன், போஸ்வெல்ஆசீர், பள்ளி முதல்வர் வி.அருள்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.