மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு
By DIN | Published On : 24th March 2019 01:04 AM | Last Updated : 24th March 2019 01:04 AM | அ+அ அ- |

மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் 15ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கங்கைகொண்டான் தொழில் வளர்ச்சி மைய ஏடிசி டயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உபதலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சென்னை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரஸாண்ட் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆசாத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 115 மாணவர், மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேசினார்.
விழாவில் துறைத் தலைவர்கள் முகம்மது அலி, கெளதுல் ஆலம், ரவி கிருஷ்ணன், அனுலா பியூட்டி, பர்வதவர்த்தினி, கிருஷ்ணா சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் நல்லமுகைதீன், அலுவலக கண்காணிப்பாளர் தமீம் அன்சர் ஆகியோர் செய்திருந்தனர். முதல்வர் (பொறுப்பு) கண்ணன் வரவேற்றார். முகம்மது அலி நன்றி கூறினார்.