Enable Javscript for better performance
அம்பாசமுத்திரத்தில் கொடிக்கம்ப பீடங்கள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் கட்சிக் கொடிகள் மற்றும் கொடிக்கம்ப பீடங்கள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
    மக்களவைத் தேர்தல் அறிவிப்பையடுத்து அனைத்துக் கட்சிக் கொடிக்கம்பங்கள் கட்சி நினைவு சின்னங்களை உள்ளாட்சி அதிகாரிகள் மறைத்து வருகின்றனர்.  இந்நிலையில் கொடிக்கம்பங்கள் அமைந்துள்ள பீடங்களையும் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அம்பாசமுத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து கட்சிக் கொடிக்கம்பங்கள் மற்றும் கொடிக்கம்ப பீடங்களை நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சிதம்பர ராமலிங்கம், பணி மேற்பார்வையாளர் சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் பொன்னுசாமி, நெடுஞ்சாலைத் துறை மேற்பார்வையாளர் வெள்ளத்துரை முன்னிலையில் நகராட்சிப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களிடம் உயர்நீதிமன்ற உத்தரவு நகலைக் காட்டியவுடன் அனைவரும் கலைந்து சென்றனர். 
    இதையடுத்து நகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு கொடிக்கம்ப பீடங்களும் அகற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai