Enable Javscript for better performance
ஆலங்குளம் அருகே அசோலா திட்ட விளக்க மாதிரி தொட்டி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குளம் அருகே அசோலா திட்ட விளக்க மாதிரி தொட்டி ஆய்வு

    By DIN  |   Published on : 28th March 2019 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கால்நடை மருந்தகத்தில் அசோலா திட்ட விளக்க மாதிரி தொட்டியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் அசோலா பாசி வளர்ப்பு முறை மாநில தீவன அபிவிருத்தி திட்டம் 2018- 2019 இன் கீழ் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் கால்நடை மருந்தகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஆறுமுக பெருமாள் மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் முருகையா  ஆகியோர் நெட்டூர் கால்நடை மருந்தகத்திலுள்ள அசோலா திட்ட விளக்க மாதிரி தொட்டியை செவ்வாய்க்கிழமை  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,  அசோலா என்னும் நீரில் வாழும் பாசியானது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கிறது. வேளாண்மையில் நெற்பயிருக்கு உரமாகவும், களைகளைக் கட்டுபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. கால்நடை வளர்ப்பில் கால்நடைகளுக்கு விலை குறைந்த மற்றும் சத்து மிகுந்த மாற்றுத் தீவனமாகவும் பயன்படுகிறது.
    கால்நடை வளர்ப்பில் அசோலாவின் பங்கு இன்றியமையாதது. அசோலாவில் லிக்னின் மற்றும் நார்சத்து அதிகம் இருப்பதால் கால்நடைகள், கோழி, பன்றி மற்றும் மீன் ஆகியவற்றிற்கு உணவாகக் கொடுக்கலாம். இத்தாவரத்தை உண்ணும் வாத்து, கோழி, பன்றி, முயல் போன்றவற்றின் எடை அதிகரிக்கும். இத்தாவரத்தை உண்டு வளரும் கோழியின் முட்டையானது மனிதர்களுக்கு கண் பார்வையைத் தெளிவடையச் செய்யும். இத்தாவரத்தை வளர்க்கும் இடத்தில் கொசுக்களின் தொல்லை இருக்காது. அசோலா பாசி தேவைப்படும் கால்நடை வளர்போர் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் சென்று பெற்று கொள்ளலாம் என்றனர். 
    அசோலா திட்ட விளக்க மாதிரி தொட்டி ஏற்பாடுகளை நெட்டூர் கால்நடை உதவி மருத்துவர் ராமசெல்வம் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கீதா ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai