Enable Javscript for better performance
இளம்பெண் கொலை: சகோதரர் காவல் நிலையத்தில் சரண்- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி, வண்ணார்பேட்டையில் இளம்பெண் புதன்கிழமை அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
    வண்ணார்பேட்டை இளங்கோ நகரைச் சேர்ந்த மதிவண்ணன் மகள் கனிமொழி (25). பொறியியல் பட்டதாரியான இவருக்கும், ஏர்வாடியைச் சேர்ந்த லெனினுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக கனிமொழி தாய் வீட்டுக்கு வந்தாராம். அவரை சமாதானப்படுத்தி அனுப்பிய நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவர் மீண்டும் வண்ணார்பேட்டைக்கு வந்தாராம். இது தொடர்பாக அவருக்கும், அவரது சகோதரரான சுந்தரபாண்டியனுக்கும் (20) இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
    இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கனிமொழியை, சுந்தரபாண்டியன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.பாளையங்கோட்டை போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனிடையே, சுந்தரபாண்டியன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai