Enable Javscript for better performance
ஏர்வாடி அருகே விபத்தில் தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஏர்வாடி அருகே விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மில் தொழிலாளி புதன்கிழமை  இறந்தார். 
    ஏர்வாடி அருகே உள்ள எல்.என்.எஸ். புரத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள் மகன் ராஜேஷ் (34). இவர், கோவை அருகே  கவுண்டம்பாளையத்தில் தனியார் ஆலையில் வேலை செய்து வந்தார். இவரது, மனைவி ஜாஸ்மின்டெய்சியா. இவர்களுக்கு 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    இந்நிலையில் டெய்சியாவின் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாமியாரை பார்ப்பதற்காக ராஜேஷ் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தாராம்.  ராஜேஷ் மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் டோனாவூரில் வசிக்கும் மாமியாரை  பார்த்துவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தாராம். ஏர்வாடி கோசல்ராம்நகர் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே  இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 
    திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் புதன்கிழமை இறந்தார்.  இது குறித்து, ஏர்வாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai