Enable Javscript for better performance
கடையத்தில் போலி பீடி தயாரித்த இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியில் போலியான பீடி  தயாரித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கடையம் பகுதியில் போலியாக பீடி தயாரிப்பதாக திருநெல்வேலியில் தனியார் பீடி நிறுவனத்தில் பிரதிநிதியாக பணி செய்து வரும் பீர்முஹம்மது (37) என்பவருக்கு தகவல் கிடைத்ததாம். 
    இதையடுத்து பீர்முகம்மது, கடையம், யோகீஸ்வரர் தெருவில் போலி பீடியினை கொண்டு சென்ற ஆட்டோவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் கீழக்கடையம் செக்கடித் தெருவைச் சேர்ந்த அண்ணாமலை மகன் கோமதி சங்கர் (42), அருணாசலம்பட்டி, தெற்குத் தெருவைச் சேர்ந்த சமுத்திரப்பாண்டி மகன் அருணாசலம் (39) ஆகியோர் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடித் தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. 
    கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி, வழக்குப் பதிந்து கோமதிசங்கர், அருணாசலம் ஆகியோரை கைது செய்தார்.  அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்கள், ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai