Enable Javscript for better performance
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து திருநெல்வேலி நகரம் வாகையடி முனையில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் த.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடைபெற வேண்டும்; புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; பொள்ளாச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    கட்சியின் மாநில குழு  உறுப்பினர் ஜி.ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.கணேசன், வி.கருப்பசாமி, சி.டேனியேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai