Enable Javscript for better performance
கீழப்பாவூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கீழப்பாவூரில் அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
    நெல்லை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் கீழப்பாவூர் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  புறநகர் மாவட்டச் செயலர் கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமையில் கீழப்பாவூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கிய அவர்,    கீழப்பாவூர், கருமடையூர், மூலக்கரையூர், சிவகாமிபுரம் உள்ளிட்ட பகுதியில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.  
    முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன்,  ஒன்றியச் செயலர் அமல்ராஜ், இளைஞர் பாசறை செயலர் சேர்மபாண்டியன், நகரச் செயலர் ஜெயராமன்,  முன்னாள் ஊராட்சித் தலைவர் ராதா மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai